ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதால் இது சாத்தியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக 8.2 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அரசின் இலக்கு வரம்பின் (2 சதவீதம்) குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே உள்ளது. மேலும், நிதி ஒருங்கிணைப்பு, இலக்கு பொது முதலீடு மற்றும் ஜி.எஸ்.டி வரி குறைப்பு போன்ற பல்வேறு சீர்திருத்தங்களால் பொருளாதார வளர்ச்சி வலுப்பெற்றுள்ளதால், வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துன்றனர்.