தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு சவரன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.