புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட முள்ளூர் பகுதியில், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றைச் சீரமைத்து விரைவில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட முள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்குப் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, அரசு அதிகாரிகளுடன் அப்பகுதிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, அங்கு ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஆழ்துளைக் கிணற்றின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த அவர், அதனை விரைவாகச் சீரமைத்து, பொதுமக்களுக்குத் தடையின்றிக் குடிநீர் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாக உள்ள நிலையில், முள்ளூர் பகுதி மக்களின் குடிநீர் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வின்போது உதவிப் பொறியாளர் கலியகுமார், முள்ளூர் கழக நிர்வாகிகள் ஆதி ஈஸ்வரன், நாகராஜன், இராஜேந்திரன், கழக உடன்பிறப்புகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.