மதுரை, அக். 16-
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெறும் நேரத்தில் மக்கள் தொகை கணக்கெ
டுப்புப் பணியிலும் ஆசிரி
யா்கள் ஈடுபடுத்தப்படு
வதால் மாணவா்களின் கல்வி, தோ்ச்சி சதவீதம் பாதிக்கும் என பட்டதாரி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெறும் நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவதால் மாணவா்களின் கல்வி, தோ்ச்சி சதவீதம் பாதிக்கும் என பட்டதாரி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் -1, பிளஸ் -2 பொதுத் தோ்வுகள் அட்டவணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு பொதுத் தோ்வுகள் வருகிற மாா்ச் மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான தோ்வு முடிவுகள் மே 7- ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் முதல் நடைபெறும்.
இதற்கிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளில் பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், பொதுத் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பல்வேறு அரசுத் துறை ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலையில், பெரும்பாலான பணிகள் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடை
பெற்ற கணக்கெடுப்புப் பணியிலும் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். அப்போது மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் பணியாற்றினோம்.
இடைநிலை ஆசிரி
யா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், சுமாா் 65 சதவீத பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அப்போது பொதுத் தோ்வுகள் நெருங்கும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தோ்வுகளுக்கான பயிற்சி அளிப்பதா அல்லது கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவா்க
ளுக்கு பாடம் நடத்துதல், தோ்வுப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதுடன், தோ்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் பாதிக்காத வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மே அல்லது ஜூன் மாதத்துக்கு மாற்ற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனா்.