புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 1, நரிமேடு பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சிரமமின்றிப் பயணிக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்து, சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் நரிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதாளச் சாக்கடைப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடித்து, சாலையைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாதாளச் சாக்கடைப் பணிகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், பணிகளைத் தாமதமின்றி முடித்து சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவிப் பொறியாளர் கலியகுமார், மாமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேல், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.