திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ. 43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, 214.50 கோடி ரூபாய் மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.