ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:- எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து விஜய் பேசியதாவது:-

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும். வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும். ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.

பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை கொள்ளை அடிக்காதீர்கள். பெரியார் பெயரை சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி. எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி. தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது. த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்? எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?

அரசியல் எதிரி தி.மு.க, கொள்கை எதிரி பா.ஜ.க. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும். 24 மணி நேரமும் தி.மு.க.வினர் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள். ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான். நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல் நடந்துள்ளது. ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.

மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக சிறப்பாக வேலை நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.

மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது. ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா? நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.