பாராளுமன்ற கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதம் 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அரசு தீவிரம் காட்டியது. இதன்படி, இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஏதுவாக கலால் வரி விதிக்கும் வகையில், 2 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். ஜி.எஸ்.டி செஸ் வரிக்கு மாற்றாக இந்த கலால் வரி விதிக்கப்படும். இந்த வரியானது சிகரெட், மெல்லும் புகையிலை பொருட்கள், ஹூக்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 40 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் உற்பத்தி வரி ஆகியவை விதிக்கப்படும்.