புதுடெல்லி: பேஸ்​புக்​கில் இருந்து பிரதமர் மோடி​யின் செல்ஃபி வீடியோ நீக்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, மெட்டா நிறு​வனம் மன்​னிப்பு கோரி​யுள்​ளது. தவறு நடந்​து​விட்​ட​தாக அந்​நிறு​வனம் ஒப்​புக் கொண்​டுள்​ளது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​ததைக் கண்​டித்​து, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யினர் (சிஜேபி) டெல்​லி​யில் அண்​மை​யில் போராட்​டம் நடத்​தினர். அப்​போது, பிரதமர் மோடி ஒரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார். இந்த வீடியோ, முதலில் இன்​ஸ்​டாகி​ரா​மில் வெளி​யிடப்​பட்​டு, பின்​னர், பேஸ்​புக்​கில் பகிரப்​பட்​டது. ஆனால், பேஸ்​புக்​கில் பிரதமரின் வீடியோ சில மணித்​துளி​களில் நீக்​கப்​பட்​டது. இதற்கு மத்​திய அரசு கடும் கண்​டனத்தை தெரி​வித்​ததையடுத்​து, உடனடி​யாக வீடியோ மீண்​டும் இடம்​பெற்​றது. தொழில்​நுட்​பப் பிரச்​சினை காரண​மாக வீடியோ நீக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்​காக மன்​னிப்பு கேட்​ப​தாக​வும் மெட்டா நிறு​வனம் விளக்​கம் அளித்​தது. ஆனால், இதை மத்​திய அரசு ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், மெட்டா நிறு​வனத்​தின் சர்​வ​தேச பொது விவ​காரங்​கள் பிரிவு தலை​வர் ஜோயல் கப்​லன் தலை​மையி​லான உயர்​மட்​டக் குழு, மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப அமைச்​சகத்​தின் (மெய்​டி) செய​லா​ளர் எஸ்​.கிருஷ்ணனை நேற்று சந்​தித்​தது். அப்​போது பிரதமரின் வீடியோ நீக்​கப்​பட்​டதற்கு மெட்டா நிறு​வனம் சார்​பில் மன்​னிப்பு கேட்​கப்​பட்​டது. தவறு நடந்​ததை ஒப்​புக் கொண்​டனர். மேலும், மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ண​வை​யும் நேற்று சந்​தித்து விளக்​கம் அளித்​தனர்.

மன்​னிப்பு கேட்ட ஜூகர்​பெர்க்: முன்​ன​தாக குழந்​தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பொருட்​கள், டீப்ஃபேக் உள்​ளடக்​கம் மற்​றும் தளத்​தின் செயல்​பாட்​டில் ஏற்​பட்ட தவறுகளுக்​காக மெட்டா நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி மார்க் ஜூகர்​பெர்க் மன்​னிப்பு தெரிவித்து மத்​திய அரசுக்கு கடிதம் அனுப்​பியுள்​ளார்​.