பிர­த­மர் மோடி­யின் அழைப்பை ஏற்று அடுத்­தாண்டு தொடக்­கத்­தில் கனடா பிர­த­மர் மார்க் கார்னி இந்­தியா வர­வுள்­ள­தாக அந்­நாட்டு பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வால் தேடப்­ப­டும் பல சீக்­கிய பயங்­க­ர­வா­தி­கள் சிலர் கொல்­லப்­பட்­ட­னர். கன­டா வில் நிகழ்ந்த இந்­தக் கொலை­க­ளுக்கு இந்­தி­யா­தான் கார­ணம் என கனடா குற்­றம் சாட்டியது. தனது தூதரை வெளி­யேற்­றிய கன­டா­வுக்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­து­டன், கனடா உயர் தூத­ரக அதி­கா­ரியை நாட்டை விட்டே வெளி­யேற மத்­திய அரசு உத்­த­ர­விட்­டது.

கனடா வாழ் மக்­க­ளுக்கு விசா வழங்க இந்­தியா இடைக்­கால தடை விதித்­துள்­ளது. இதனால் இரு­நா­டு­கள் இடை­யி­லான உறவு கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அண்மையில் அமெ­ரிக்க - கனடா உற­வில் ஏற்­பட்ட விரி­சல் குறித்து பேசிய கனடா பிர­த­மர் மார்க்­கார்னி, இந்­தி­யா­வு­ட­னான உற­வில் நாங்­கள் முன்­னேற்­றம் அடைந்து வரு­கி­றோம், இந்­தி­யா­வு­ட­னான

வர்த்­தக உற­வுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றோம். இந்­திய பிர­த­மர் மோடியை சந்­தித்­தது இல்லை.

ஆனால் எங்­க­ளது வெளி­யு­றவு துறை அமைச்­சர் உள்­ளிட்ட பிற பிற மந்­தி­ரி­கள் இந்தியாவுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­ற­னர். வெளி­நா­டு­க­ளு­டன் சிறந்த உறவை வலுப்­ப­டுத்­து­வது மிக­வும் அவ­சி­ய­மா­கும் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி­யின் அழைப்பை ஏற்று கனடா பிர­த­மர் மார்க் கார்னி 2026-ம் ஆண்­டின் தொடக்­கத்­தில் இந்­தியா வர­வுள்­ள­தாக கனடா பிர­த­மர் அலு­வ­ல­கம் அறிவித்துள்­ளது.

இந்த சந்­திப்­பில் முக்­கிய வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கும் என்று எதிர்பார்க்கப்படு­கி­றது.