புதுடெல்லி, நவ.25
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பணி ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இதையடுத்து 53–ஆவது தலைமை நீதிபதியாக ேநற்றுசூர்யகாந்த் பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவின் 52-–ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் 14.5.2025 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் உள்பட சுமார் 300 தீர்ப்புகளை அவர் எழுதியுள்ளார்.
உலான்பாதர் (மங்கோலியா), நியூயார்க் (அமெரிக்கா), கார்டிப் (யுகே) மற்றும் நைரோபி (கென்யா) ஆகிய இடங்களில் பல்வேறு சா்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று ஓய்வு பெற்றார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இம்மாதம் 20–ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் நீதித்துறை காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என அறிவித்தது.
நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 53-ஆவது இந்திய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நேற்றுபதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.
1962–ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10–ஆம் தேதி அரியானாவில் உள்ள பேட்வார் கிராமத்தில் சூர்யகாந்த் பிறந்தார்.
அரியானாவில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றினார்.
பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக 2004–ல் அவர் பதவியேற்றார். 2018–ல் இமாச்சலபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார். 2019–ல் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியானார். 2027–ஆம் ஆண்டு பிப்ரவரி 9–ஆம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.