புதுடெல்லி, அக். 18-

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, திடீர் நெஞ்சுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவ

மனையில் அனுமதிக்கப்பட்டு

ள்ளார். மருத்துவ

மனைக்குக்கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குள்ள நுரையீரல் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலுள்ள அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

குஜராத் முதல்வராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசுத் தலைவராக செயலாற்றிய வரலாற்று சாதனையை முன்னிட்டு அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பாஜகவின் வளர்ச்சிக்கும் அத்வானி ஆற்றிய மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் வெகுவாக பாராட்டி நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.