சென்னை, அக். 18-

தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கி

ணைப்பாளர் நல்லசாமி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்வர் கள் எதிர்ப்பாளர் என்பதை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பதிவு செய்தி

ருக்கிறார். ஒன்று முதல

மைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து கள் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். இல்லை

யென்றால் கள்ளியக்கத்து

டன் வாதிட்டு கள் தடை நியாயமானதே என நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் முதலமைச்சர் தயாராக இல்லை என்றால், முதலமைச்சர் பதவியிலிருந்து கீழே இறங்குவதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.

கள் இறக்குவதும் பருகுவதும் அரசியல

மைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்ற அடிப்படையில், வரும் 2027 ஜனவரி 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். இந்த அரசு போராளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் கேட்கக்கூடிய ஒரு கேள்வி, நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை முன்னிறுத்தி கள் இறக்குகிறோம்; நீங்கள் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டது மதுவிலக்குச் சட்டமா, இல்லை மதுவிலக்குச் சட்டத்திற்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா? இதற்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். ரூ.1,500 கோடி செலவில் பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு தடுப்பணை கட்டிச் சுரங்கம் அமைத்தால் போதும், மோயாறு மூலம் கீழ்பவானி அணைக்கு வரும். அதை குடிநீர் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது.

கிட்டத்தட்ட ஒரு 60 ஆண்டுகள் சினிமாவினு

டைய ஆளுமை தமிழ்நாடு அரசியலில் அதிகமாக இருக்கிறது. எம்ஜிஆரை வைத்துத்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனுடைய உச்சகட்டமாக இன்றைக்கு விஜய் முதலமைச்சராக வந்துள்ளார். இதை தொடர்ந்து பல நடிகர்களுக்கு முதல்வராகும் ஆசை வந்துவிட்டது. நடிகர்கள் நாட்டை ஆளக்கூடாது என யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் உங்களைச் சுயபரிசோதனை செய்து கொண்டு அரசியலில் கால் பதியுங்கள். முதல்வர் டிராக்டர் ஓட்டுவது, முருங்கை பறிப்பது எனச் சினிமாவில் நடிப்பது போல அவர் நடிக்கிறார். எங்களைப் பொறுத்தளவில், ஏதோ நல்லாட்சி நடந்தால் போதும்.