சென்னை, அக். 7-

சிஎம்டிஏ நிர்வாகத்தின் அனுமதியைத் தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்க

த்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியு

ள்ளன.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் கடுமையான இடநெருக்க

டியைக் கருத்தில் கொண்டும், எதிர்காலத் தேவைகளை முன்னிட்டும் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, பட்டினப்பாக்க

த்தில் உள்ள 21.37 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இருப்பினும், இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதலே மீனவச் சமூகத்தினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி போராட்டங்களும் நடைபெற்றன. இதுகுறித்து விளக்கமளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய தலைமைச் செயலகமா அல்லது மீனவர்களின் வாழ்வாதா

ரமா என்ற கேள்வி எழுந்தால் முதலமைச்சர் மீனவர்கள் பக்கமே நிற்பார் என்றும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதியளித்தார். இதனால் இத்திட்டம் கைவிடப்பட்டு வேறு இடங்கள் பரிசீலிக்கப்படு

வதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தை வணிகப் பயன்பாட்டிற்கு (Commercial Zone) மாற்றச் சென்னை பெருநகர வளர்ச்சித் குழுமம் (சிஎம்டிஏ) தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இந்த 21.37 ஏக்கர் நிலம், ஏற்கனவே குடியிருப்பு மற்றும் பொதுப் பயன்பாட்டு வகைப்பாட்டில் இருந்தது. தற்போது வணிக மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம், திட்டத்திற்கான அடுத்த கட்ட அனுமதிகளைப் பெறுவது எளிதாகும் என்பதால், தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் மீண்டும் வேகம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மீனவர்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத் திட்டம் கைவிடப்பட்டு, அவ்விடத்தில் வணிக வளாகம் ஏதேனும் கட்டப்பட உள்ளதா அல்லது தலைமைச் செய

லகக் கட்டிடத்திற்காகவே இந்நிலம் மறுவகைப்படுத்த

ப்பட்டுள்ளதா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. நில வகைப்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள போதிலும், புதிய தலைமைச் செயலகத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட

ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.