ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது. தற்போது அதன் 3- ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இப்படம் நாளை 19-ம் தேதி வெளியாகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" படத்தின் முன்பதிவு தொடங்கிநிலையில், இதுவரை முன்பதிவில் மட்டும் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.