காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் தாமு, மாணவர்கள், மாணவிகள் முன்பு ஆற்றிய உரை தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு. காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தாமு கலந்து கொண்டு உரையாற்றினார்.. அதில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களை அமைதியாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.. தேவையற்ற சத்தம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.. கைகளை தட்டுவது மட்டுமே ஆற்றலைத் தரும்.
கூச்சலிடுவது மாணவர்களுக்கான மரியாதையைக் குறைக்கும்.. எதையும் குறையாகப் பார்க்கக் கூடாது, அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். ஒரு அம்மா, தன் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இந்த உலகில் தான் பார்த்ததை எல்லாம், தான் கேட்டதை எல்லாம் காட்ட நினைப்பார். ஆனால், அப்பா ஒரு படி மேலே போய் கடவுளையே காட்டுவார்..
நான் உங்களை சாப்பிட்டியானு கூட கேட்டதில்லையே அப்பா? என்று எத்தனையோ பேர் கொரோனா காலத்தில் அழுது வேதனைப்பட்டார்கள்.. உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள், உங்கள் 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு முதல் இப்போது கல்வி கற்று தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி சொல்லுங்கள். பெற்ற தாயை உதைக்கிறீர்களே, அப்பா அம்மாவின் தவிப்பைப் புரிந்து கொள்ளவில்லையே. அப்பாவோட கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா? அவர் சிந்தும் ஒவ்வொரு சொட்டு வியர்வையிலும் உங்கள் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.. உங்க அப்பா உங்களுக்காக எத்தனையோ அவமானங்களைத் தாங்கி, கஷ்டப்பட்டு சம்பாதித்து உங்களைப் படிக்க வைக்கிறார் என்றெல்லாம் உருக்கமாக பேசினார். தாமு பேச பேச, அவரது உணர்ச்சிமிகு உரையைக் கேட்ட மாணவிகள் தங்களை மறந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டனர்.. விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் தாமு ஆற்றிய இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.