ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த விஞ்ஞானிகள் குவாண்டம் அறிவியல் பிரிவில் ஆய்வு நடத்தி அதற்கு நோபல் பரிசு பெறுகிறார் எனும் பட்சத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார்.

குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி அமராவதியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவை சேர்ந்த நபர்கள் குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார். அமராவதியில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மையம் அமைக்கப்படும் என்றும் இது உலக தரம் வாய்ந்த ஒரு ஆய்வு மையமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான ஒரு மாநிலமாக ஆந்திரா உருவாகும் என அவர் கூறும் அவர் குவாண்டம் தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளிலும் இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கும் என கூறியுள்ள அவர் சுகாதாரத் துறையில் இது தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் முதல் மாநிலமாக ஆந்திரா விளங்கும் என தெரிவித்திருக்கிறார் .அடுத்த இரண்டு ஆண்டுகளில் குவாண்டம் கம்ப்யூட்டிங் கருவிகள் ஆந்திராவின் அமராவதிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்த அவர் குவாண்டம் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் அரசு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.