சென்னை, செப். 29-
தவெக தற்போதைய சூழலில் 5 சதவீதம் சரிவில் உள்ளதாம். அதேபோல மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுகவை விட தவெக 1.5% முன்னிலையில் இருப்பதாக தவெக தரப்பு சர்வே ஒன்றும் சொல்கிறது. ஆனால் பாமக, வன்னியர் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதில் இன்னும் தெளிவில்லை. இந்த பரபரப்பான களநிலவரம் குறித்து நமக்கு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே பார்ப்போம்..!!?
இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக அன்பு மணி அறிவித்துள்ள சூழலில், பாமகவின் கட்சி வாக்குகளையும், வன்னியர் சமூக வாக்குகளையும் கைப்பற்ற ஆளும் கட்சி தவெகவும், எதிர்க்கட்சி திமுகவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இதனால் மதுராந்தகத்தை கைப்பற்ற 2 கட்சிகளும் சில சீக்ரெட் ஆப்ரேஷனில் குதித்துள்ளன.
இடைத்தேர்தலின் கள நிலவரம்
இடைத்தேர்தலின் கள நிலவரம் குறித்து வாரத்திற்கு ஒரு சர்வே எடுத்து விஜய்க்கு அனுப்பி வருகிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம்... தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் தவெகவுக்கு ஆதரவான நிலையே காணப்பட்டது. அதேசமயம், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட சர்வேக்களில் தவெகவின் ஆதரவு நிலையில் 5 சதவீதம் சரிவை கண்டிருந்தது...
இது குறித்து, ஜான் ஆரோக்கியாமி, ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருக்கிறார் விஜய்.. அதற்கு அவர்கள், “சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த 120 நாளில் இடைத்தேர்தல் வந்தால், மக்களின் எதிர்பார்ப்பில் கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்யும். பிரச்சாரத்தில் நீங்கள் இறங்கும்போது அது அனைத்தும் மாறிவிடும். அதனால் கவலைப்படத் தேவையில்லை.
ஜான் ஆரோக்கியாமி, ஆதவ் அர்ஜுனா
இன்னும் சொல்லப்போனால், ஆளும் கட்சி ஜெயித்தால் தான் தொகுதிக்கு நல்லது நடக்கும் என்கிற கருத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும். அது நமக்கான வெற்றியை உறுதி செய்யும். அதனால், வெற்றி நம் பக்கம் தான். கான்ஃபிடெண்டாக இருக்கலாம் “ என்ற வார்த்தையை அவரிடமே சுட்டிக்காட்டி விளக்கமளித்திருக்கி
றார்கள்.
இதனிடையே அரசியல் ஆலோசகர்கள் விஜய்யிடம் சில கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.. அதாவது, மதுராந்தகம் தொகுதியில் வன்னியர்களின் வாக்குகள் இப்போதுவரை நடுநிலையாகவே இருக்கின்றன என்றாலும், அந்த வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பதில் இன்னும் உறுதியான நிலை இல்லை என்று சமீபத்திய சர்வேக்கள் சொல்கின்றன.
திமுக 1.5 சதவீதம் வித்தியாசம்
அதுமட்டு
மல்லாமல், தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே வாக்கு சதவீதத்தில் 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது.. அதாவது, திமுகவை விட தவெகவுக்கு 1.5 சதவீத வாக்குகள் கூடுதலாக இருப்பதாக சர்வே சொன்னாலும், இந்த வித்தியாசம் எந்த நேரத்திலும் மாறக்கூடும்” என்றெல்லாம் ஆலோசகர்கள் விஜய்யிடம் தெரிவித்தார்களாம்.
பாமக, வன்னியர் வாக்குகள் இன்னும் எந்தப் பக்கம் செல்லும் என்பது தெளிவாகாத நிலையில், தவெக, திமுக இடையேயான வாக்கு வித்தியாசமும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது விஜய்க்கு டென்ஷனை தந்துவிட்டதாம்..
அதனால்தான், திமுகவுக்கு எதிராக, ஜெம் வீரமணி கைது விவகாரத்தை நேற்றைய தினம் விஜய் தனது பிரச்சாரத்தில் ஆவேசமாகவும் பேசினாராம்.. மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரத்திலும் ஜெம் வீரமணி விவகாரத்தை முன்வைத்து திமுகவை கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தாராம் விஜய்..