தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 மே 10-ம் தேதிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த சிறப்புப் பணிகளுக்காக ஏராளமான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையம், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களையும், ஒரு தொகுதிக்கு 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், அந்தந்த மாவட்டத்திற்கான தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். அவருக்கு கீழ் தொகுதிகளுக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.