டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினை அதிக அளவில் நிலவி வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் சுவாசப் பிரச்​சினை உள்​ளிட்ட பல்​வேறு வியா​தி​களுக்கு ஆளாகின்​றனர். இதற்கு மத்தியில் பாராளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடர் கடந்த திங்​கள்​கிழமை தொடங்​கி நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினையை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளு​மன்​றத்​துக்கு எதிர்க்​கட்​சித் தலைவர்​கள் காஸ் முகக்​கவசத்துடன் வந்​தனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் பாராளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளது. அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்து விட்டு, டெல்லி காற்று மாசு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சண்டிகர் மக்களவை எம்.பி., மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.