தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை, நயன்தாரா கரம்பிடித்தார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தங்கள் செல்ல மகன்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று பெயரிட்டுள்ள இந்த ஜோடி, வலைதளங்களில் அவ்வப்போது தங்கள் பிள்ளைகளுடன் விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் துபாய் விமான நிலையத்தில் வலைப்பேச்சு குழுவினரை தற்செயலாக சந்தித்துள்ளனர். அப்போது, அந்தணன், பிஸ்மி ஆகியோருக்கு உயிர், உலக்கை ஹாய் சொல்ல வைத்தார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் வந்த உலக் வணக்கம் என்று சொல்வதை கேட்டுத் திகைத்த வலைப்பேச்சு குழுவினர், தமிழ் நல்லா சொல்லிக் கொடுத்திருக்கீங்களே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த நயன்தாரா, வீட்டிலேயும் தமிழில்தான் பேசுவாங்க என்று கூறினார். இந்தக் காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.