இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அனுவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். அதிபர் புடினுக்கு நேற்றுமுன்தினம் இரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு டெல்லி ஐ.டி.சி மவுரியா ஓட்டலில் அதிபர் புடின் நேற்று முன்தினம் இரவு தங்கினார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புடின் அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புடினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது