சென்னை, அக். 18-

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (76) காலமானார். தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா மறைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் இசையமைப்பாளர் தேவாவின் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். 1950ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்த தேவா 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1986ல் மாட்டுகார மன்னாரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளராக தேவா மாறினார். கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டிலை இன்று வரை இவரது இசையே அலங்கரிக்கிறது. ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு இசையமைத்தவர் தேவா.

அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி, சிட்டிசன், முகவரி போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. விஜயின் குஷி, அஜித்தின் வாலி, சூர்யாவின் நேருக்கு நேர் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். அறிமுக ஹீரோக்கள் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவருக்கும் ஹீட் பாடல்களை கொடுத்தவர் தேவா. ஏ.ஆர்.ரகுமான், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் தேவா. கச்சேரிகளில் தொடங்கிய தேவாவின் இசை பயணம் கானா பாடல்கள் மூலம் சினிமாவில் தனித்துவம் பெற்றது. கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளில் தேவா காலமானார்.