சிவகாசி, அக். 13-
சிவகாசியில் விடுமுறை நாளான நேற்று பட்டாசு வாங்குவதற்காக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குவிந்ததால் பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கியது.
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சிவகாசி, சாத்துார், வெம்ப
க்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1100 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
தொடர் ஆய்வால் ஆலைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. தவிர மக்கள் விரும்புகின்ற வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் நான்கு வாரம் உள்ள நிலையில் நேற்று ஞாயிறு என்பதால் வெளி மாவட்டத்தை சேர்ந்த
வர்கள் கார்கள், பஸ்களில் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்தனர். தவிர அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு வாங்குவதற்காக தொடர்ந்து சிவகாசிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சிவகாசி பகுதியில் இப்போது பட்டாசு வியாபாரம் களை கட்டியுள்ளது.