பழநி, அக். 13-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.20.15 கோடியில் புனரமைக்கப்பட்ட பழநி ரயில்வே ஸ்டேஷனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் பிளாட்பாரங்களை இணைக்கும் பாலம், ரயில்வே ஸ்டேஷன் முகப்பு, அலங்கார வளைவு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடையும் சாலை, காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம், நடைமேடை மேம்படுத்துதல், எஸ்கலேட்டர், லிப்ட், எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே என ரூ. 20.15 கோடி செலவில் மேம்பாட்டு பணி நடந்தது.

இதை சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் இருந்து முதல்வர் விஜய் முன்னிலையில், பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரயில்வே ஸ்டேஷனில் பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திறப்பு விழாவை முன்னிட்டு நடந்த போட்டிக

ளில் பங்கேற்ற மாணவர்க

ளுக்கு பரிசுகள் வழங்க

ப்பட்டன. திண்டுக்கல் எம்.பி.சச்சிதானந்தம் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ்மீனா, முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் பொறியாளர் கணேஷ், இணை தலைமை பொறியாளர் கார்த்திக், முதுநிலை கோட்ட அலுவலர் சங்கரன், பழநி நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி, பா.ஜ., பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.