த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய், இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னுதானே? இது இரண்டும் இருக்குறதுதான் தாய் மனசு. நம்ம தமிழ் மண்ணும் தாய்ப்பாசம் கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னுதானே? நம்முடைய வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறாக இருந்தாலும் நம்ம எல்லாரும் சகோதர்கள்தானே.
ஒரு இளைஞனுக்கு எதிராக தன்னுடைய சொந்த சகோதரர்களே அவனை பாழங்கிணற்றில் தள்ளி விட்டார்கள். அவன் மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனான். அரசனாகி தன்னை தள்ளிவிட்ட சகோதர்களையும் நாட்டையும் காப்பாத்தினான்.இதே மாதிரி பைபிள்ல நிறைய கதைகள் இருக்கு. அந்த கதை யாரை குறிக்குதுன்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அது உங்களுக்கே தெரியும். சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பத்தில் த.வெ.க. 100 சதவீதம் உறுதியாக இருக்கும்.
கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே. எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே பொருந்தும். இவ்வாறு அவர் பேசினார்.