ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் நேற்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
இந்த நிலையில், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடனும், த.வெ.க. கரை வேட்டியுடன் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக கடந்த மாதம் விஜய் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்த போது இது ஜனநாயக கட்சி (த.வெ.க.). யார் வேண்டுமானாலும், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்வதற்கு ஆட்சேபனை கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.