தமிகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நேற்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை பகிர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,
தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.