ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும். தமிழ்நாடு அரசின் சமத்துவ மயான விருதை இரண்டு முறை கலிங்கப்பட்டி கிராமம் பெற்றுள்ளது. 500 ஆண்டுகளில் ஒரு சிறு பிணக்கோ, சாதி, மத மோதலோ வந்தது இல்லை பெருமைக்குரியது. கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள். ஆனால் அதனால் நமது ஊரில், அரசியல் சண்டையோ, சாதிச் சண்டையோ வந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சமூக நல்லிணக்க ஊராட்சி விருது-2025 என்ற விருதினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கி சிறப்பித்திருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதினை பெரும் அளவிற்கு மிகச் சிறப்பாக பணியாற்றி வரும் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மணிமொழி சந்துரு, ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் கவுன்சிலர் ஆகியோருக்கு வாழ்த்துகளைகளையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.