கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்தஷ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 30.12.2025 அன்று காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், காரை நகர் கடல் பரப்பில் மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள் 11 பேரையும் கைது செய்தனர்.

மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்து, மீனவர்களை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதான சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.