எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதேநேரத்தில் கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா வருகிற 9-ம் தேதி சென்னை வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்குகிறார். சோழிங்கநல்லூரில் தனது பிரசாரத்தை அவர் இன்று தொடங்குகிறார். தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி முடிவாகாமல் உள்ளதால், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இது எடப்பாடியின் பிரச்சாரத்திலும் எதிரொலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.