அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் குறித்து வரும் 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்ககளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.