ராமேஸ்வரம், அக். 13-
ராமேஸ்வரம் அருகே மண்டபம் மரைக்காய
ர்பட்டினம் கடலோரத்தில் க்யூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நிறுத்தி இருந்த பைபர் கிளாஸ் படகில் மூடைகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனையிட்டத்தில் 1410 கிலோ சுக்கு, 20 கிலோ ஏலக்காய் இருந்தது. இதனை கடத்தல்காரர்கள் கள்ளத்தனமாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு உள்ளனர். க்யூ பிரிவு போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். சுக்கு, ஏலக்காய் மதிப்பு ரூ. 6 லட்சம். பறிமுதல் செய்த சுக்கு, ஏலக்காயை மண்டபம் சுங்கத்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனை கடத்த முயன்ற கடத்தல்காரர்கள், படகு உரிமையாளரை க்யூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.