அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யின் முதலீடுகள், அரசு தலையீடு இல்லாமல் சுயமாக , நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த முதலீடுகள் கடுமையான சரிபார்ப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் லோக்சபாவில் கூறினார். எல்.ஐ.சி நிதிகள் தொடர்பான முதலீட்டு விஷயங்களில் நிதியமைச்சகம் எவ்வித ஆலோசனையையும், வழியுறுத்தலையும் எல்.ஐ.சி.க்கு வழங்குவதில்லை என்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் தெரிவித்தார்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகள், எல்.ஐ.சி.யால் மட்டுமே கடுமையான உரிய சரிபார்ப்பு, இடர் மதிப்பீடு மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு இணக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி எடுக்கப்படுகின்றன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.