எஸ்.ஐ.ஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாடலாசிரியர் புலமை பித்தன் அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்தவர். சென்னை மயிலாப்பூர் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் பாடலாசிரியர் புலமைபித்தன் பெயர் இடம்பெற்றுள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வசித்து வந்த புலமைபித்தன் 2021-ல் காலமானார். புதுமைபித்தன் இறந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞராகவும், எம்.ஜி.ஆர். கலைத்த சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தவர் பிரபல பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன். மயிலாப்பூர் தொகுதி தேவடி தெருவில் அவர் வசித்த வீட்டில்தான் வாக்குரிமை இருந்தது. அவர் இறந்து போய் 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. புலமைப்பித்தன் எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்பித் தந்திருக்க மாட்டார். ஆனாலும், சீராய்வுக்குப் பிறகான வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் உள்ளது. இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள் தங்களைத் தேடுகிறார்கள். இதுதான் எஸ்.ஐ.ஆர் லட்சணம் என தி.மு.க. ஐடி விங் மாநில ஆலோசகர் கோவி.லெனின் விமர்சித்துள்ளார்.