வடமாநிலங்களில் நிலவும் உறைபனியால், தேங்காய் எண்ணெய் பயன்பாடு முற்றிலும் குறைந்ததால், 15 கிலோ டின்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. இதில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரையாக்கப்பட்டு காங்கயம் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அங்கு, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, உள்மாநில தேவைக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக கேரளாவில் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதனால், தேங்காய் எண்ணெய் விலை விண்ணை முட்டும் உயரத்தில் இருந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் உறைபனி அதிகம் உள்ளதால் தேங்காய் எண்ணெயின் தேவை குறைந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.