அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் கடந்த மாதத்தில் மட்டுமே 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். வெடிகுண்டுகள் போடப்பட்டதில் மக்களில் சிலரும் கூட பலியாகி உள்ளனர். இந்த படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இதுபோன்ற விஷயங்களால் 3-ம் உலக போர் ஏற்பட்டு விடும். இதனையே நான் முன்பும் கூறினேன். இதுபோன்ற விளையாட்டுகளை ஒவ்வொருவரும் விளையாடி வருகின்றனர் என நான் கூறினேன். இது, மூன்றாம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும். அதனை நாம் பார்க்க விரும்பவில்லை என்று கூறினார்.
இதனிடையே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் காணப்படும் மெதுவான முன்னேற்றம் டிரம்பை பெரிய அளவில் விரக்தியடைய செய்துள்ளது என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.