ரஜினி​காந்த் நடிக்​கும் ஜெ​யிலர் 2 படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கி வரு​கிறார். இதில் எஸ்..ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்​கின்​றனர். மோகன்​லால், சிவ ராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்​றனர். அனிருத் இசை அமைக்​கும் இந்​தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் இதில் இந்தி நடிக​ரான ஷாருக்​கானும் நடிக்க இருப்​ப​தாகத் தகவல் வந்துள்​ளது. கூலி படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்​ட​தாக​வும் பல்​வேறு காரணங்​களால் அவர் நடிக்கவில்லை என்​றும் கூறப்​படு​கிறது. அதனால் ஆமிர்​கான் கவுரவ வேடத்​தில் நடித்​திருந்​தார். இப்போது ஜெயிலர்-2 படத்தில், ஷாருக்​கான் நடிப்​பார் என்​றும் அவர் தொடர்பான காட்​சிகள் மார்ச்சில் படமாகும் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி​ உள்​ளன.