சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கலாம் ஆனால் நான் வயிற்று பிழைப்புக்காக தான் சினிமாவுக்கு வந்தேன், அந்த சினிமாவில் மக்களுக்கு ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று ராஜ்கிரண் பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பலருக்கும் பரிச்சயமானவர்தான். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஜ்கிரண் தான் சில வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு பேட்டியை பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராஜ்கிரண் பேசும்போது,
ஒரு சிலர் சினிமாவில் அறிமுகமாகும் போது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று லட்சியத்தோடு வருவார்கள். ஆனால் நானெல்லாம் அப்படி வரவே இல்ல. பஞ்சம் பிழைப்பதற்காக வந்தது போல தான் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த சினிமாவுக்கு அடி எடுத்து வைத்தேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் ஏதாவது வேலைக்கு போகணும்னு சென்னைக்கு வந்த இடத்தில் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன்.
அப்போது சினிமாவில் இருந்து காசு வந்ததால் அடுத்தடுத்து அங்கிருந்து முன்னேறி கதாநாயகனாகவும் நடித்து விட்டேன். ஆனால் நான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் சரி அந்த படத்தில் என்னை வைத்து ஒரு கருத்து சொல்வது போல இருக்க வேண்டும். நான் ரஜினிக்கு தாத்தாவாக கூட நடிப்பேன் ஆனால் ஏதோ வந்துட்டு போற மாதிரியான கேரக்டரில் மட்டும் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்பதுதான் என்னுடைய கருத்து என்று சொல்லி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.