சென்னை, அக். 18-
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’.
இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளி
யானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும் திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இதனால் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெய்ண்ட் மூவிஸின் தலைமை பொறுப்பில் இருக்கும் இன்பன் உதயநிதி ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்ல
த்திற்குச் சென்று அவரைச் சந்தித்து இருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமோஜியை கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் இன்பன் உதயநிதி. அடுத்ததாக, ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தச் சூழலில், ‘ஜெயிலர் 2’ வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை இன்பன் உதயநிதி சந்தித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.