மதுரை, செப். 22-
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் மூலஸ்தான காட்சிகள் வெளியானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.17ல் நடந்தது. அதன் பின் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க இலவச தரிசனத்திற்கு ஏற் பாடு செய்யப்பட்டது. கோயிலுக்குள் பக்தர்கள். அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ள நிலை யில், கும்பாபிஷேகத்துக்கு பிந்தைய கூட்ட நெரி சலை கருத்தில் கொண்டு, பக்தர்களின் வசதிக்காக சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், பக்தர்கள் சிலர் கோயிலின் அம் மன், சுவாமி மூலஸ்தான பகுதிகளை அலைபே சியில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங் களில் பதிவிட்டனர். இது கோயில் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தடையை மீறி மூலஸ்தான காட்சிகள் எவ்வாறு பகிரப்பட்டது என்பது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபி ஷேகம் முடிந்த நிலையில், பக்தர்கள் கூட்ட நெரி சலை தவிர்க்க செப்.23 வரை இலவச தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் செப்.17ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின் செப்.20 வரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆனால் வருகை அதிகரித்ததால் அவர்கள் நலன் கருதி, செப்.23 வரை இலவச தரிசனத்தை நீட்டித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செப்.17 முதல் 20 வரை கூட்ட நெரிசலை தவிர்க்க ரூ.50, ரூ.100, கட்டணமில்லா தரிசனம் அறிவிக்கப்பட்டது. தற்போது செப். 23 வரை கட்டணமில்லா தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.