தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24 H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில், 24 H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த பில்லா படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அஜித்குமார்
December 02, 2025
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்