மதுரை, அக். 18-
மதுரை மாநகராட்சி மண்டலம் 3-ல் உள்ள நகரமைப்பு அலுவலகத்தில் உதவிப்பொறியாளரின் கைப்பாவையாக இருந்து வருபவர் செல்வராஜ். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் அனுமதி எப்படி வழங்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் நிறைய ஊழல் வெளிவரும்.
அதாவது 5 மாடி கட்டிடத்திற்கு நோட்டீசு கொடுக்காமலேயே வீட்டு பிளான் அனுமதி பெற்று வணிக வளாகமாக மாற்றி வீட்டுக்கு வரி விதிப்பது போலவே வசூல் செய்து வருகிறார். இதற்கு உடந்தையாக சேலத்தில் இருந்து மாற்றமாகி மதுரை மத்திய வருவாய் பிரிவுக்கு வந்த சேலம் ஏ.ஆர்.ஓ. பார்த்தசாரதி உடந்தையாக உள்ளார். இவர் மேற்குறிப்பிட்ட செல்வராஜூடன் சேர்ந்து வார்டு 52-ல் உள்ள கட்டிடங்களுக்கும், வீடுகளை தங்கும் விடுதியாக மாற்றி அதற்கு கமர்ஷியல் வரி விதிக்காமல் வீட்டு வரியே வசூலித்து வருகிறார்கள். இதை பலரும் பலமுறை கூறியும் ஆணையாளர் கண்ணில் மண்ணை தூவி தப்பித்து வருகிறார்கள். ஆணையாளரும், உதவி ஆணையாளரும் தலையிட்டு என்ன நடக்கிறது? என்று பார்த்தால் பல உண்மைகள் வெளிவரும் என நகரமைப்பு அலுவலகத்திலேயே ஊழல் நடப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகிறார்கள்.
மேலும் தீபாவளி நேரம் என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை கீழே நிற்கிறார்கள் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அலுவலகத்திற்கு வராமலேயே வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அலுவலகம் வராமல் இருக்கும் மர்மத்தை உதவி ஆணையாளர் கண்காணித்து வந்தால் பல உண்மைகள் வெளிவரும். இங்கு நடக்கும் ஊழல்கள் குறித்து புகார்களாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்
பட்டுள்ளது என மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களே புலம்புகிறார்கள்.