மதுரை, அக். 15-

மதுரையில் திரும்பும் திசையெல்லாம் குப்பையும், தெருக்கள்தோறும் பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி

ன்றனர்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இவைகள் 5 மண்டலங்க

ளாகப பிரிக்கப்பட்டு நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த அக்.5ம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாநகரமே குப்பை காடானது. குப்பைகள் முழுமையாக அள்ளாததால் எங்கெங்கும் குப்பை சிதறி கிடந்து, கோயில் நகரம் குப்பை நகராகவே காட்சியளித்தது. தேங்கி கிடக்கும் குப்பைகளில், சமீபத்தில் பெய்த மழைநீரும் சேர்ந்து கடும் துர்நாற்றத்துடன், தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதற்கெல்லாம் உச்சமாக மதுரை நகரின் 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி வழிகிறது. இதனால், குடியிருப்புவாசிகள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நகருக்குள் பழைய 72 வார்டுகளில், சுமார் 786 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் பழுதடைந்துள்ளன.

இப்பகுதிகளின் 37 பம்பிங் நிலையங்களில், 24 லிப்ட் நிலையங்களில் மோட்டார் வசதிகள் மேம்படுத்தாதது உள்ளிட்ட பலதரப்பட்ட காரணங்களால், கழிவுநீரை இழுத்து கடத்தும் திறனற்று கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய்களின் ஹோல்ஸ் வழியாக பீறிட்டு தெருவெங்கும் ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இத்துடன் பாதாள சாக்கடை திட்டம் இல்லாது இணைக்கப்பட்ட 28 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் கால்வாய்க

ளிலேயே சாக்கடை கழிவுநீரும் ஓடி குட்டையாக மாறி, மலேரியா உள்ளிட்ட பலதரப்பட்ட தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது. மதுரை புதூர் கற்பகநகரின் பம்பிங் நிலையத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியின் பிரஸ் காலனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளின் 60க்கும் அதிக தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடி கடும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல், நகரில் சர்வேயர் காலனி, அண்ணா நகர், தல்லாகுளம், செல்லூர், தெற்குவாசல், சிம்மக்கல், முனிச்சாலை, பெரியார் பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி கொசுக்களும், அதன்வழி நோய்களும், கடும் துர்நாற்றமும் என மல்லிகை மணக்கும் மதுரை சாக்கடை நாற்றத்தில் தவியாய் தவித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் கூறிய

தாவது:

மதுரையில் எங்கு பார்த்தாலும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுவதும், தேங்கி கிடக்கும் குப்பைகளுமாக மிகமோசமான சுகாதார சீர்கேட்டில் இருக்கிறது. மாநகராட்சிக்கு ஆன்லைன் மூலம் பொதுமக்கள் புகார் அளிப்பது கிணற்றுக்குள் போட்ட கல்லாக, எந்த பணியும் நடப்பதில்லை.

முதலில் அனைத்து பம்பிங் ஸ்டேஷன்களிலும் மோட்டார்கள் சரியாக இயங்கவும், பாதாள சாக்கடை கழிவுநீர் முறையாக செல்லவும் அவர் ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி முடங்கி கிடப்பது, மக்களை தினந்தோறும் அவதிக்கு ஆளாக்கி வருகிறது.

அவலநிலை

மாநகராட்சி கமிஷனர் தினந்தோறும் ஆய்வுகள் நடத்தி வருகிறார் என கூறுகிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. தலையில் தொப்பியை வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் தான் தினமும் நடைபெறுகிறது. மேலும் நாள்தோறும் கூட்டம், கூட்டம் என்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. அனைத்து அதிகாரிகளும் வந்து ஒன்று கூடுகிறார்கள். பிறகு கலைந்து செல்கிறார்கள்.

என்ன காரணம் என்று கேட்டால் அவருக்கு பொழுது போகவில்லை என்றால் எங்களையும் வரவழைத்து விடுகிறார்கள். எங்களில் பாதி பேருக்கு மேல் சுகர் பேஷன்ட்டாக இருக்கிறோம். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். என்ன கொடுமை இது?

மேலும் பார்வையா

ளர்களை சந்திக்கும் நேரம் என்று ஆணையாளர் அலுவலகத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்திற்கு வருவதில்லை. மக்களையும் சந்திப்பதில்லை. இதற்கு முன்பு இருந்த பெண் ஆணையாளர் அலுவலகத்திற்கே வருவதில்லை. பொது

மக்களையும் கண்டு

கொள்வதில்லை. இவர் இளவயது ஆணையாளர் நன்றாக பணிபுரிவார் என்று நினைத்தால் பொதுமக்களையும் சந்திப்பதில்லை. கூட்டம், கூட்டம் என்று கூட்டத்தை கூட்டி நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறி கலைந்து வருகிறார்கள். இது தான் நடந்து வருகிறது.

ஒரு துணை ஆணை

யாளர் கோப்புகளை கொண்டு வாருங்கள் என்று கூறினால் இதோ வருகிறேன் என்று அலை

பேசியை அணைத்துவிட்டு சென்றுவிடுகிறார். இதுபோல் இன்னும் பல அவலக்கேடுகள் மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வருகின்றன. இங்கு நடக்கும் அவல

நிலையை முதல்வர் விஜய்க்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.