மதுரையில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் மீனாட்சிபுரம் சிறு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் செல்லூர் மீனாம்பாள்புரம், பீபிகுளம், நரிமேடு, மகாத்மா காந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, ஆலங்குளம், பனங்காடி, வாகைக்குளம், சிக்கந்தர்சாவடி, கூடல்நகர், ஆனையூர், கூடல்புதூர், கொன்னவாயன்சாலை ஆகிய பகுதிகளில்இருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக செல்லூர் 50 அடி ரோட்டில் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நல வாரியத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி, எஸ். பாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவிற்கு சொக்கலிங்கம் வேல்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் ஆதிசங்கர் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளரும், ஜூனியர் ரிப்போர்ட்டர் நாளிதழின் உரிமையாளருமான ஆசிரியர் சமயசெல்வம், செல்வராஜ்,கண்ணன், தங்கதுரை ஆகியோர் வரவேற்று சிறப்புரையாற்றினர். செயலாளர் அமிர்தபாண்டியன் நன்றி கூறினார். இந்த முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்தனர்.