இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது. முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
மகளிர் கிரிக்கெட்: இந்தியா - இலங்கை மோதும் டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு
November 28, 2025
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்