சென்னை, அக். 9-
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாள
ர்களுக்கான 14வது குழு பயிற்சி நிறைவு அணி
வகுப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், காவல் துணை கண்காணிப்பா
ளர்கள் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 11 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் என மொத்தம் 25 அலுவலர்கள் ஓராண்டு அடிப்படை பயிற்சி மேற்கொண்டனர். உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு உள்ளிட்ட 52 வாரகால இப்பயிற்சியை பல்வேறு துறைகளை சேர்ந்த அனுபவமிக்க வல்லுநர்களை கொண்டு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் விஜய் காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பயிற்சியில் ஒட்டு மொத்த அளவில் சிறந்து விளங்கிய ஆனீஷ் பிரதீப்க்கு வீரவாள் முதலமைச்சரின் கோப்பை மற்றும் தங்கப் பதக்க
த்தையும், கார்த்திகாவுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யாவுக்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கியதோடு, பிற பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில், சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் சரத்குமார், மரிய வில்சன், குமார், அரசு தலைமைக் கொறடா சபரிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், காவல் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் ராஜீவ்குமார், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.