பெரியாரின் 52-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளான இன்று 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு முதல்வரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.