புதுக்கோட்டை:


தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு பேச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.


மாணவர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனை, சமூக விழிப்புணர்வு, பேச்சாற்றல் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகள் குறித்த புரிதலை வளர்க்கும் நோக்கில் இப்போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.


இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.