வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தமிழக எம்பிக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு பதில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழக மக்களின் குரலை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழகத்தின் கோரிக்கைகளை, தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டசபை தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல.

அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழகத்துக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம். நிமிர்ந்து நடைபோடுவோம். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு பதில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.